சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் அமைகின்றன. அந்த வகையில், தற்போது பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வித்தை காட்டுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சில சமயம் ரசிக்கும்படியும், பல நேரங்களில் அச்சமூட்டும் வகையிலும் இருக்கும். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு சாலையின் நடுவே மூன்று நான்கு பாம்புகள் ஒன்றாக இணைந்து ‘சங்கமம்’ நடத்துகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Amarjeet Rajak (@thearajak)

பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, ஏதோ ஒரு மாயவித்தை செய்வது போல உடல் அமைப்பை மாற்றி மாற்றி அசைப்பது காண்போரை வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய காட்சியை தாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. பதிவேற்றப்பட்ட சில நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் இதனைப் பார்த்து பகிர்ந்துள்ளனர்.