எக்ஸ் வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ படுவேகமாக வைரலாகி வருகிறது. விவசாயி ஒருவர் தான் விளைவித்த மாதுளைப் பழங்களை டிராக்டரில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் லாரியில் வந்த இருவர் அவரிடம் பழங்கள் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த விவசாயி, “வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக பழங்களை வழங்கியுள்ளார். விவசாயியின் இந்த தாராள குணத்தைக் கண்டு நெகிழ்ந்து போன அந்த லாரி பயணிகள், அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு பழங்களை எடுத்துச் சென்றனர்.
லாரி ஓட்டுனர்கள் கேட்ட மாதுளை பழம்..மனம்போல் எடுத்துக்கொள்ள சொன்ன விவசாயி#farmer #lorrydriver #humanity #love #dinakarannews https://t.co/uJD1ODd0Kj pic.twitter.com/bT5b5L9bFX
— Dinakaran (@DinakaranNews) March 30, 2026
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, விவசாயியின் மனதைப் பாராட்டி வருகின்றனர். “பணத்தை விட மனிதநேயம் தான் முக்கியம்” என்பதை தனது செயலின் மூலம் அந்த விவசாயி நிரூபித்துள்ளார். இன்று உலகம் முழுவதும் பல சண்டைகளும், பிரச்சினைகளும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய மனிதாபிமான செயல்கள் நெட்டிசன்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
