நாமீபியா நாட்டு மணல் பரப்பில், யானை ஒன்று மணல் மேட்டில் இருந்து குட்டிச் சுவர் போல சறுக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பொதுவாக யானைகளை பார்த்தாலே கம்பீரமாகவும், பெரிய உருவமாகவும் தான் பார்ப்போம். ஆனால், இந்த வீடியோவில் அந்த யானை தும்பிக்கையையும், கால்களையும் மணலில் ஊன்றி, மிகவும் ஜாலியாக மணல் மேட்டில் இருந்து கீழிறங்கும் காட்சி யாரையும் வியக்க வைக்கும்.

​இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள், இது ‘பாலைவனத்தில் வாழும் வகை’ (Desert-adapted) யானை என்று குறிப்பிட்டுள்ளனர். சாதாரண யானைகளை விட, இவை அதிக வெப்பத்தைத் தாங்கி, பல நாட்கள் தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமை கொண்டவை. இப்படிப்பட்ட சூழலிலும், இந்த யானை எவ்வித கவலையும் இன்றி மணல் மேட்டில் சறுக்கி விளையாடுவது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.