அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள ஓலேஹாவைச் சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குழந்தைகள் அனைவரும் நன்கு வளர்ந்த போதிலும் தாய்ப்பால் சுரப்பது அவருக்கு நிற்கவில்லை. அவருக்கு நாட்கள் பல கடந்த நிலையிலும் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகவே இருந்து வந்தது. ஹைபர் லாக்டேஷன் சின்ட்ரோம் காரணமாக அவருக்கு பால் சுரப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்தப் பெண் தினந்தோறும் சுரக்கும் பாலை அமெரிக்காவில் உள்ள பால் வங்கிக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். மூன்று ஆண்டுகளில் சுமார் 1600 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரிடம் பிடித்துள்ளார். அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.