FIFA மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடர் இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றது இந்த தொடரில் ஸ்விட்சர்லா அணியும் இணைந்துள்ளது. கடந்த 2015 ஆம் வருடம் நடந்த FIFA மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றும் வரை முன்னேறிய சுவிட்சர்லாந்து  அணி தற்போது இரண்டாவது முறையாக 2023 ஆம் ஆண்டுக்கான FIFA மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது

இம்முறை  சுவிட்சர்லாந்து  மகளிர் அணியில் இமான் பெனி எனும் 17 வயது சிறுமி இடம்பெற்றுள்ளார். இந்த அணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய போட்டிகளில் பங்கெடுத்த ஐந்து வீரகணங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் ஒரு தேசிய போட்டியில் விளையாடியதன் மூலம் மட்டுமே இமான் பெனி இந்த அணியில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சுவிட்சர்லாந்து மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் இன்கா கிரிங்ஸ் கூறுகையில் “இமான் பெனி சந்தேகம் இன்றி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது முத்திரையை பதிப்பார்” என தெரிவித்துள்ளார்.