
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வேலை செய்து வந்த நிலையில் இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டு வந்தது.
இதனை அறிந்த வளர்மதி மகன் இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் தன்னுடைய வீட்டில் இருந்ததை பார்த்த சிறுவன் தகராறில் ஈடு பட்டுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் மலை அடிவாரத்திற்கு சென்று மது அருந்தி உள்ளனர் .அப்போது மது பாட்டிலை உடைத்து ராஜ்குமாரை இந்த சிறுவன் குத்தினார். பின்னர் அங்கே இருந்த கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இதனைடுத்து காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.