புதுச்சேரி பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங். இவர் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தின் போது சிறப்பான பாதுகாப்பு கொடுத்தார். அந்த பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

இதனால் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் உங்களால் கரூரில் ஏராளமானோர் இறந்துவிட்டனர் எனவே என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள் எனக்கு அது நன்றாக தெரியும் என்றார். இதனைத் தொடர்ந்து ஈஷா சிங் பற்றி பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் அது தொடர்பான செய்திகளும் வெளிவந்தது.

நேர்மையான அதிகாரியான ஈஷா சிங் பற்றி பலரும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நிலையில் instagramல் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி உள்துறை பாஜக அமைச்சர் நமச்சிவாயம் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு கொடுத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். மேலும் இது தொடர்பான போட்டோ வைரலாகி வருகிறது.