சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, மனிதன் மற்றும் நாய் இடையிலான பாசப்பிணைப்பை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்துகிறது. உலகில் மிகுந்த விசுவாசம் கொண்ட விலங்கு என்று சொல்லப்படும் நாய், தனது உரிமையாளரிடம் காட்டும் நம்பிக்கை மற்றும் அன்பை இந்தக் காட்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.
சமூக ஊடக தளம் X-இல் @RADHIKA_INF என்ற பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், இறந்துவிட்ட ஒரு முதியவரின் உடலருகே அவரது செல்ல நாய் உருகி அழுவதைக் காணலாம். உரிமையாளரை இழந்த துயரத்தில் நாய் சோகத்துடன் அலறும் அந்தக் காட்சி, அருகிலிருந்த குடும்பத்தினர்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
यह दृश्य देखकर शायद आप लोग भी भावुक हो जाएंगे 🥹
जिस मालिक ने उसे प्यार दिया, अपनापन दिया, आज उसी मालिक के दुनिया छोड़ने पर
पालतू कुत्ता खूब रोया 😢यह दृश्य साबित करता है कि वफ़ादारी और प्यार बेज़ुबानों के दिल में इंसानों से कहीं ज़्यादा गहरा होता है 🖤
सच में… कुत्ते सिर्फ… pic.twitter.com/pEnBgbfImK
— Radhika Podcast 2.0🎙️ (@RADHIKA_INF) December 9, 2025
வீடியோவை பகிர்ந்த பயனர், “இந்த காட்சி யாரையும் உணர்ச்சிவசப்படுத்தும். தன்னை நேசித்த உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு செல்ல நாய் அழுகிறது. விசுவாசமும் அன்பும் மனிதர்களை விட விலங்குகளின் இதயங்களில் ஆழமாக ஓடுகின்றன என்பதற்குச் சான்று இது. நாய்கள் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல; குடும்பத்தின் ஒரு பகுதிதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாயின் சோக அலறல் பலரையும் நெகிழவைத்துள்ள இந்த வீடியோ, மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இடையிலான உணர்ச்சி பிணைப்பை மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
