தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வருகிறார். தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் கட்சி தொடங்கிய புதிதில் அறிவித்த விஜய் தொடர்ந்து திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் எனவும்  கண்டிப்பாக குடும்ப ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் நடிகர் விஜய் கூறிவரும் நிலையில் திமுக அரசில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகளவில் இருப்பதாகவும் விமர்சனம் வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சிப்பது பற்றி அமைச்சர் ஐ. பெரிய சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தமிழக வெற்றி கழகம் இன்னும் அரசியல் கட்சியாகவே அங்கீகாரம் பெறவில்லை. மேலும் இதன் காரணமாக அந்த கட்சியைப் பற்றி பேச எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.