தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில், ஆட்சி அமைந்தால் அமைச்சர்களாக வாய்ப்புள்ளவர்கள் என்று கூறப்படும் ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்தப் பட்டியலில் தியாகராய நகரில் என்.ஆனந்த், கோபியில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், சோழிங்கநல்லூரில் சரவணன், அறந்தாங்கியில் முகமது பர்வேஸ், தஞ்சையில் விஜய் சரவணன், மதுரை வடக்கில் கல்லானை, குமாரபாளையத்தில் விஜயலட்சுமி என முக்கிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், காரைக்குடியில் பிரபு, ஈரோடு கிழக்கில் பாலாஜி, திருப்பூர் வடக்கில் சத்யபாமா, எழும்பூரில் ராஜ்மோகன், ஆயிரம்விளக்கில் ஜேசிடி பிரபாகர், கொளத்தூரில் வி.எஸ்.பாபு, கோவை வடக்கில் சம்பத்குமார், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், விருகம்பாக்கத்தில் சபரிநாதன் மற்றும் சேலம் தெற்கில் தமிழன் பார்த்திபன் ஆகியோரும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், தொகுதி வாரியாக முக்கிய முகங்களை முன்னிறுத்தி வலம் வரும் இந்தப் பட்டியல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
