தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பா.ம.க-வின் ராமதாஸ் அணி அமைத்த கூட்டணி, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பல முக்கிய புள்ளிகளின் வெற்றியை தலைகீழாக மாற்றியுள்ளது.

குறிப்பாக, சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் வெற்றியை சசிகலா கட்சி வேட்பாளர் இசக்கிராஜா பிரித்த 11,602 வாக்குகள் தடுத்து நிறுத்தியுள்ளன. இதேபோல் முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளர் ராம்குமார் பாண்டியன் பெற்ற 40,422 வாக்குகள் அ.தி.மு.க-வின் வெற்றியைப் பறித்துள்ளன.

உசிலம்பட்டி மற்றும் தென்காசி தொகுதிகளிலும் இதே போன்ற வாக்கு பிரிப்பால் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். மொத்தத்தில், 64 தொகுதிகளில் தனித்து களம் கண்ட சசிகலாவின் கட்சி, முக்கிய தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மொத்தமாகப் பாதித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.