விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று சென்னை பனையூரில் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியில் புதிதாக இணைந்த முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் பங்கேற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் இது. இந்தக் கூட்டத்திற்கு முன்னர், சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அ.தி.மு.க.வின் நிர்வாகிகளான செங்கோட்டையனும் நாஞ்சில் சம்பத்தும் சந்தித்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஆறு வருடங்களுக்கு பிறகு அரசியல் களத்தில் மீண்டும் அடியெடுத்து வைத்த நாஞ்சில் சம்பத், “தவெகவை வெற்றி சமவெளிக்குக் கொண்டு வர புயல் வேகத்தில் பணியாற்றுவேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட தேர்தல் வியூகங்கள் பற்றி முடிவெடுக்கப்பட உள்ளன.