தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான 30 வேட்பாளர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை நேற்று வெளியிட்டார்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில், த.வெ.க தலைவர் விஜய் தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர்கள் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது. விருப்ப மனு அளித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு, ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”

வெளியிடப்பட்டுள்ள 30 பேர் கொண்ட பட்டியலில் லாஸ்பேட்டையில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யூ. அசனா மற்றும் பாகூரில் என். தனவேலு ஆகியோர் களம் காண்கின்றனர்.

தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்:

எண் தொகுதி வேட்பாளர் எண் தொகுதி வேட்பாளர்
1 லாஸ்பேட்டை வி. சாமிநாதன் 16 மங்கலம் எம்.கே. சத்யா
2 காரைக்கால் தெற்கு கே.ஏ.யூ. அசனா 17 காமராஜ் நகர் டாக்டர் ஆர். சுமன்
3 நெட்டப்பாக்கம் (தனி) எல். பெரியசாமி 18 நெல்லித்தோப்பு எஸ். விக்னேஷ்வரன்
4 திருபுவனை (தனி) ஏ.கே. சாய் ஜே. சரவணன் குமார் 19 காலாப்பட்டு டி. சசிகுமார்
5 முத்தியால்பேட்டை ஜே. பிரகாஷ் குமார் 20 இந்திரா நகர் எஸ். முருகன்
6 பாகூர் என். தனவேலு 21 கதிர்காமம் ஆர். ஜெயந்தி
7 ராஜ்பவன் வி.ஜே. சந்திரன் 22 ஊசுடு (தனி) எஸ். சரவணபவா
8 உப்பளம் எஸ். சிவா 23 தட்டாஞ்சாவடி எம். பன்னீர்செல்வம்
9 உழவர்கரை எஸ். சசிபாலன் 24 ஏம்பலம் வி. தமிழ்செல்வன்
10 அரியாங்குப்பம் எஸ். குமரவேலு 25 நெடுங்காடு (தனி) யு. காமராஜ்
11 மணவெளி பி. ராமு 26 திருநள்ளாறு ஏ. ராஜா முஹம்மது
12 வில்லியனூர் ஆர். ரமேஷ் 27 காரைக்கால் வடக்கு ஏ. வெங்கடேஷ்
13 முதலியார்பேட்டை என். மணிபாலன் 28 நிரவி டி.ஆர். பட்டினம் ஜி. கணேஷ்
14 மண்ணடிப்பட்டு கே. பாரதிதாசன் 29 மாகே எம். பிரிஜேஷ்
15 உருளையன்பேட்டை எஸ். மரிய பிரான்சிஸ் 30 ஏனாம் ஏ. தோட்டா ராஜு

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (மார்ச் 24) கடைசி நாள் என்பதால், த.வெ.க வேட்பாளர்கள் அனைவரும் நாளை மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் புதுச்சேரியில் முதல் வேட்பாளராக லாஸ்பேட்டையில் களமிறங்கும் சாமிநாதன் புதுச்சேரியின் முன்னாள் பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் கடந்த 2017-2021 காலகட்டத்தில் நியமன எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.