சமூக ஊடகங்களைப் பரப்பலாகக் கலக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட (மார்பிங்) ஒரு இந்திய இளைய ஜோடியின் வீடியோக்கள் மற்றும் படங்கள் வைரலாகியுள்ளன. 19 நிமிடங்கள் நீளமானதாகக் கூறப்படும் MMS, இணையத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து, பல பயனர்கள் அதன் “புதிய பகுதிகள்” வேண்டி சிரமமான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இச்சூழலை பயன்படுத்தி AI நிபுணர்கள் பலரும் கவன ஈர்ப்புக்காக அந்த ஜோடியை அடையாளப்படுத்தி, பல AI-உருவாக்கப்பட்ட போலி MMS வீடியோக்களையும் படங்களையும் வெளியிட்டனர். இவை அனைத்தும் “19 நிமிட MMS-இன் கூடுதல் பகுதிகள்” என்ற பொய்யான பெயரில் பரவி வருகின்றன.

இந்த சர்ச்சையை பயன்படுத்தி சைபர் மோசடி குழுக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. போலியான லிங்குகள்,  தவறான ஈமெயில்கள்,  “MMS full video” எனும் கவர்ச்சியான தலைப்புகள்
மூலம், நம்பிக்கையற்ற இணைய பயனர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.

https://www.instagram.com/reel/DRqelRqicIx/?igsh=MThucTdvbDhnNG1r

MMS சர்ச்சையின் மத்தியில், சமூக ஊடகங்களில் ஒரு பெண் தரையில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் காட்சியைக் கொண்ட மற்றொரு வீடியோவும் வைரலாகத் தொடங்கியது. இது “MMS லீக் சர்ச்சையால் மன உளைச்சலில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்” எனச் சிலர் தவறாக பரப்பினர்.

ஆனால் போலீசரும் புலனாய்வாளர்களும் இதைத் தெளிவாக மறுத்துள்ளனர். ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை: தற்கொலை வீடியோவில் உள்ள பெண்
MMS வீடியோவில் இருப்பதாகக் கூறப்படும் பெண் அல்ல. இரண்டும்
முழுமையாக தொடர்பில்லாத இரண்டு தனித்தனி சம்பவங்கள். சில சமூக ஊடக கணக்குகள் கவன ஈர்ப்புக்காக இரண்டு சம்பவங்களையும் ஒன்றாக இணைத்து தவறான கதைப் பின்னணியை உருவாக்கியுள்ளன. பல்வேறு தளங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில்,
“இவை இரண்டும் சம்பந்தமற்றவை” என்று போலீசார் அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளனர்.

மேலும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், “இந்த வகையான போலி MMS, மாற்றப்பட்ட AI படங்கள், மற்றும் உண்மைக்கு புறம்பான கதைகள் தனிநபர்களின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கக்கூடியவை. இதுபோன்ற தவறான தகவல்களை பகிர்வதற்கும் பரப்புவதற்கும் சட்டப்பூர்வ விளைவுகள் உண்டு,” என்று எச்சரித்துள்ளனர்.