தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (29) என்பவருடைய வங்கிக்கணக்கில் கடந்த 6ஆம் தேதி  SMS இல்  வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்புத்தொகை இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அந்த வங்கிக்கு சென்று விசாரித்ததில்  வங்கி நிர்வாகிகள் குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பியுள்ளனர். தொடர்ந்து வங்கி ஸ்டேட்மென்ட் எடுத்து பார்த்துள்ளார்.

அதில் ரூ.756 கோடி இருப்பு தொகையை காட்டாமல் அவர் வைத்திருந்த சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியுள்ளது. ஆனால் கணேசன் செல்போனுக்கு மீண்டும் ஒருSMS  வந்துள்ளது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குச் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும். நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.