அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டுக்கான 10, +1, +2 பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.