நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக தமிழக அரசு சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை, பெங்களூரு மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் மக்கள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகள் முதல் பயணிக்க தொடங்குவார்கள்.

இதனால் தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில் 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி நவம்பர் 7ஆம் தேதிக்கான பேருந்துகளுக்கு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் அதிக அளவிலானவர்கள் முன்பதிவு செய்தனர். நவம்பர் எட்டாம் தேதிக்கு அக்டோபர் 10ஆம் தேதி இன்றும், நவம்பர் ஒன்பதாம் தேதிக்கு அக்டோபர் 11ஆம் தேதி நாளையும் முப்பதிவு செய்து கொள்ளலாம். இதனால் தீபாவளி பயணத்தை மேற்கொள்ள உள்ளவர்கள் விரைந்து தங்களுடைய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.