நடிகர் விஜய்  தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம்  வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவர்களுடன் ஆலோசித்து மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்காக மருத்துவ முகாம் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரவு பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம் நடத்தி வரும் நிலையில், இப்பட்டியலில் மருத்துவ முகாம் இணைய உள்ளது