தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகிபாபு. இவர் பிரபல காமெடியனாக மட்டுமல்லாமல் சிறந்த கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பொம்மை நாயகி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகிபாபு.

இதற்கிடையில் யோகிபாபுவுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தால் அவ்வப்போது கிரிக்கெட் பயிற்சி செய்து வருகிறார். அந்த அடிப்படையில் யோகிபாபு கிரிக்கெட் பயிற்சி செய்துகொண்டிருக்கும் வீடியோ ஒன்றை தன் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த டுவிட் வீடியோவில் ரசிகர் ஒருவர் “அண்ணா இது விஜய் சார் பேட் ஆ? என கேள்வி கேட்க, அதற்கு “Yes” என யோகி பாபு பதிலளித்தார். இதுகுறித்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.