தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எச். வினோத். இவர் நடிகர் அஜித் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கினார். இதில் கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.‌ இந்நிலையில் வலிமை படத்தில் சில சண்டை காட்சிகளை தன்னுடைய படத்திலிருந்து திருடிவிட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் எச். வினோத் மீது குறும்பட இயக்குனர் ராஜேஷ் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

குறும்பட இயக்குனர் ராஜேஷ் தான் இயக்கிய தங்க சங்கிலி என்ற குறும்படத்தில் உள்ள பல காட்சிகளை இயக்குனர் எச். வினோத் திருடிவிட்டதாகவும், இதுகுறித்து பலமுறை அவரிடம் பேச தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியாததாலும் தற்போது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இயக்குனர் ஒருவர் புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.