லியோ படம் பல்வேறு தடைகளை கடந்து நாளை வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி அரசு அறிவித்த படி காலை 9 மணிக்கே தொடங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. நேற்று தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி உள்துறை செயலாளரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் படம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி 11 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ஒரு ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது. துப்பாக்கி படத்தின் முதல் ஷோ டிக்கெட் கிடைத்தால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பேன் என்பதை தான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து உதயநிதி ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.