தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் மார்ச் 28-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். இதற்காகப் பெரம்பூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள விஜய் தரப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறைப்படி அனுமதி கோரியிருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் தற்போது அதிரடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
தமிழக அரசியலில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த ஐந்து தொகுதிகளில் அவர் மேற்கொள்ளும் பரப்புரை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் விஜய்யின் நேரடிப் பிரவேசத்திற்கான முதல் கட்டமாக இது பார்க்கப்படுவதால், சென்னை முழுவதும் தவெக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
