தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா தளபதி விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது.

இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஷாம், யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் வாரிசு படத்தில் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா 4 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.