தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் இயக்குனராக வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அதற்கான முயற்சிகளை தற்போது சஞ்சய் எடுத்து வரும் நிலையில் சில குறும்படங்களையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் முதலில் ஒரு குறும்படம் வெளியான நிலையில் தற்போது மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த குறும்படத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் சஞ்சய் இயக்கும் குறும்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த குறும்படத்திற்கு Full the Trigger என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.