தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் லியோ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் வெளியான முதல் பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு ஆடி இருப்பார். இதற்கு பல சர்ச்சைகள் எழுந்த நிலையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தன்சானியாவில் பிரபல youtube இருவர் லியோ பாடலுக்கு விஜய் போல நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்த ரசிகர்கள் தளபதி பாடல் என்றால் சும்மாவா எனக்கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)