தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.   இவர்  மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இந்த படம் தான் இவருடைய கேரியரில் முக்கியமான படமாகும். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விதார்த் மைனா படத்தின் ஷூட்டிங் குறித்து பேசி உள்ளார். அதில் மைனா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் அமலாபாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. அதனால் 20 முறை டேக் எடுத்தேன் என்று கூறியுள்ளார்.