தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்காக 10 பேர் கொண்ட ஒரு வலிமையான ‘தேர்தல் பிரசாரக் குழுவை’ அவர் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நபர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்கள் அனைவரும் இந்தக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று விஜய் தனது அறிக்கையில் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், தேர்தல் நேரத்தில் மக்களைச் சரியான முறையில் சென்றடையவும் இந்த பிரசாரக் குழு மிகப்பெரிய தூணாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்தத் திட்டமிட்ட மூவ், தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், இப்போதே தேர்தல் களத்தில் குதித்து வேலையைத் தொடங்கியிருப்பது மற்ற அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஒரு கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழுவின் பட்டியல் இதோ:
- N. ஆனந்த்
- ஆதவ் அர்ஜுனா B.A.
- K.A. செங்கோட்டையன்
- A. பார்த்திபன்
- B. ராஜ்குமார் DME
- K.V. விஜய் தாமு
- S.P. செல்வம் DCE
- பிச்சை ரத்தினம் கரிகாலன்
- M. செரவு மைதின் (எ) நியாஸ்
- J. கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.
