கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கியது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று காரணங்களை முன்னிறுத்தி இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முப்பெரும் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசுகையில், தளபதியின் துப்பாக்கியில் 40 தோட்டாக்கள் இருக்கின்றன என்று பெருமிதமாக பேசியுள்ளார்.
