தாம்பரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு அதிரடி வெற்றி பெற்றுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆர். சரத்குமார், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர்களை எச்சரித்த தவெக MLA சரத்குமார், “கால்வாய் போடும் பணியில் எந்தவொரு முறைகேடோ, தரக்குறைவோ இருக்கக் கூடாது.
கட்சி பெயரும் தலைவர் பெயரும் தப்பாயிடக் கூடாது பார்த்து ஒழுங்கா கால்வாய் போடணும் ஒப்பந்தகாரர்களை எச்சரித்த தாம்பரம் எம்எல்ஏ @sarath0828 🔥 pic.twitter.com/npVzZuA1d1
— priya (@PriyankaSmile01) May 18, 2026
நம்முடைய கட்சியின் பெயருக்கும், தலைவர் விஜய் அவர்களின் பெயருக்கும் எந்த ஒரு சின்ன களங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். அதனால் பார்த்து ஒழுங்காக, தரமான முறையில் கால்வாய் பணிகளை முடித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். தப்பு நடந்தா ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்” என்று ஸ்பாட்டிலேயே வறுத்தெடுத்துள்ளார். இந்த மாஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி, லைக்குகளைக் குவித்து வருகிறது.
