கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஊரணி மேட்டில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு முன்பு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் விசாரிக்க சென்றனர்.

அப்போது அச்சத்தில் அந்த பெண் வீட்டிற்குள் ஓடினார். உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் தான் டெக்ஸ்ஸ்டைலில் வேலை பார்ப்பதாகவும், வறுமையால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர் வீட்டில் வசிக்கும் கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி பிரிவு தலைவரான ரகுபதி என்பவர் தன்னை வைத்து விபச்சாரம் செய்வதாகவும் இளம்பெண் ஒப்புக்கொண்டார். இதேபோல பல பெண்களை அவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரகுபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட பெண்களை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.