தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகள் பவித்ரா. பவித்ரா வாசுதேவநல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி அருகே இருக்கும் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 22-ஆம் தேதி பவித்ரா திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரிக்கு விளையாட வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவ சக்தி(22) என்பவருடன் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு சிவசக்தி செல்போனில் பவித்ராவிடம் பேசும்போது உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் பவித்ரா தற்கொலை செய்துள்ளார். எனவே தற்கொலைக்கு தூண்டியதாக சிவசக்தி மீது வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.