விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியான தனது இரண்டாவது மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சமையல் இன்னும் முடியவில்லை என்று மகள் கூறியதால் ஆத்திரமடைந்த பாபு, மகள் என்றும் பாராமல் அவரைச் சுவரில் முட்டி, காலால் எட்டி மிதித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி கடந்த 26 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

​இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள தந்தை பாபு மீது, தற்போது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெறும் சாப்பாடு செய்யவில்லை என்ற காரணத்திற்காக, மது போதையில் ஒரு தந்தை தன் மகளையே அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவியின் எதிர்காலம் மது அரக்கனால் சிதைக்கப்பட்டிருப்பது வேதனையின் உச்சம்.