ஹெல்மெட் போடாத ஒரு பைக்கரை போக்குவரத்து போலீஸ் நிறுத்தி, ஏன் ஹெல்மெட் போடவில்லை என்று கேட்டார். அதற்கு அந்த பைக்கர், “என் தலை ரொம்பப் பெருசு, எனக்குச் சரியான அளவுள்ள ஹெல்மெட் கிடைக்கலை” என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். உடனே போலீஸ் தனது ஹெல்மெட்டைக் கொடுத்துப் போட்டுப் பார்க்கச் சொன்னார்.

ஆனால், அந்த ஹெல்மெட் பைக்கரின் தலைக்குள் போகாமல், அப்படியே மேலே நின்றுவிட்டது, காவலரும் இதை எதிர்பார்க்கவில்லை. இதைப்பார்த்த போலீஸ் சிரித்துக்கொண்டே, “ஐயாவுக்காகவே கம்பெனிகிட்ட சொல்லித் தனியா ஒரு ஹெல்மெட் தயாரிக்கச் சொல்றேன்!” என்று ஜாலியாகச் சொல்லி அனுப்பினார். இந்தச் சம்பவம் வீடியோவாக எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.