அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 271 என்ற எண் கொண்ட விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்டு 167 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் ஹவாய் தீவில் உள்ள விமான நிலையத்தில் தர இறங்கியது. ஆனால் தரை இறங்கும்போது விமானத்தில் ஏற்பட்ட சிறிய சிக்கலால் ஒரு பயணி மற்றும் ஐந்து பணியாளர்கள் என ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

பின்னர் விமானம் தரையிறங்கியதும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது பற்றி ஏர்லைன்ஸ் நிறுவனம் தரப்பில் கூறுகையில் பராமரிப்பு குழுவின் சோதனைக்கு முன்பே விமானம் பயணிகளின் சேவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. அதோடு வாடிக்கையாளர் மற்றும் குழுவினரின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.