தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களில் 93.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மொத்தம் 8019 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் ஆன கீர்த்தி வர்மா என்பவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் இந்த மாணவன் மொத்தம் 471 மதிப்பெண்கள் பெற்று  அசத்தியுள்ளார்.