அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு, ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை பரிசுத்தொகுப்பு ஒன்றை அளிக்க உள்ளது.  இந்நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவை கிராமப்புறங்களில் ஒளிபரப்பு செய்ய டிடி பொதிகை ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேம்படுத்தப்பட்ட புதிய வடிவிலான தமிழ் டிடி பொதிகை தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு தொடங்க உள்ளது. எல்லைப்புற கிராமங்களுக்கும் அரசின் தகவல் ஒலிபரப்பு சேவைகள் கிடைக்கும் வகையில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் ஒலிபரப்பப்படும் என்றார்.