உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி நிறுவப்பட உள்ள பலராமர் சிலையின் படங்கள் வெளியாகியுள்ளன. சிலை வெள்ளை துணியால் மூடப்பட்டிருக்கிறது.

கருவறையில் பதிக்கப்பட வேண்டிய ராமர் சிலை கர்நாடக சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலில் சிலையை நிறுவும் முன் சடங்குகளின் ஒரு பகுதியாக, பலராமர் கருவறைக்குள் கொண்டு வரப்பட்டார்.