தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே நடிகர் நடிகைகள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் வெளியாகி பேர அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் மனோபாலாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல நடன இயக்குனர் சம்பத்ராஜ் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 54. நடிகர் அஜித்தின் அமராவதி, காதல் கோட்டை, வான்மதி, என் சுவாசக் காற்றே, சின்ன ஜமீன் மற்றும் மக்களாட்சி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.