தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள கஷ்டடி திரைப்படத்தை இயககியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள நிலையில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி மற்றும் ப்ரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கஷ்டடி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.