பெங்காலியில் வெற்றிகரமான தொடரான ஸ்ரீமோயி எனும் சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவதுதான் பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியா வீட்டிலேயே கோபி மற்றும் ராதிகா தங்க ஒவ்வொரு நாளும் போராட்டம் நடக்கிறது.

இந்த சீரியலில் அம்மாவிற்கு எப்போதும் ஆதரவாகவும் சமத்து பிள்ளையாக நடிப்பவர் எழில் என்ற விஷால். இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு சென்று உள்ளார். அங்கு அவரிடம் உங்களது காதலி யார் என கேட்டு உள்ளனர். அதற்கு அவர் காதலி யார் என கூறாமல் நடிகை த்ரிஷாவை தான் காதலித்து வருவதாக தெரிவித்து உள்ளார்.