தமிழகத்தை திமுக அரசை நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நினைவாக்குவோம் என்ற முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் திமுக பயிற்சி பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது முகவர்கள் தான். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் அரசாக திமுக அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு சீரழித்து விட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பாதுகாப்பு என்ற வாக்குறுதி என்ன ஆனது? பாஜக ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாள் கைது செய்யப்படுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.