காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற்றது.காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4  மாநில அதிகாரிகள் பங்கேற்றன. ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையிலான கூட்டத்தில் புதுவை, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர்  பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கோரிய 3.6  டிஎம்சி தண்ணீரை திறக்க இயலாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. தமிழகம்கோரிய 3.6 டிஎம்சி நீரை தர முடியாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா வாதம் செய்துள்ளது.  நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே தமிழகத்திற்கு நீர் திறக்க முடியும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதம் தரவேண்டிய 5 டிஎம்சி நீரில் 1.5 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்துள்ளது என தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது.