இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது பிறையை பார்த்து கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இந்த அடிப்படையில் இந்த வருட ரம்ஜான் பண்டிகை  நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை  முன்னிட்டு தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.