பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கோடை விடுமுறையில் மக்களின் வசதிக்காக  தாம்பரம் – நெல்லை இடையே ஏப்.27, மே 4, 11, 18, 25 ஆகிய 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை – எழும்பூர் இடையே ஏப்.28, மே 5, 12, 19, 26 தேதிகளிலும், நாகர்கோவில் – தாம்பரம் இடையே ஏப். 23, 30, மே 7, 14, 21, 28 தேதிகளிலும், தாம்பரம் – நாகர்கோவில் ஏப்.24, மே 1, 8, 15, 22, 29, ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.