உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பசுமை உலக விருது வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. காற்று தரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோ கவனம் செலுத்துகிறது. இதற்காக அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

பசுமை உலக விருது என்பது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அதை நேர்மையான தாக்கத்திற்கான அர்ப்பணிப்பை குறிக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன் முயற்சிகள் மற்றும் ஒரு நிலையான மாதிரியை கொண்டு மெட்ரோ பயணிகளுக்கும் சென்னை மக்களுக்கும் நம்பகமான மற்றும் விரைவான பயண அனுபவத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.