தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாபெரும் வேளாண் வணிகத் திருவிழாவை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ஜூலை 8 மற்றும் ஜூலை 9 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழா நடைபெற உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் 300க்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்படும். வேளாண் பொருட்கள் விற்பனையும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதே விவசாயிகளின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்பதால் வேளாண் பொருள்களை பார்வையிடலாம்.