சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை விரைவு ரயில் ஜூலை 10, 11, 17,18,24 ஆகிய தேதிகளிலும், ஈரோடு மற்றும் ஜோலார்பேட்டை விரைவு ரயில் ஜூலை 11, 17,18 ஆகிய தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.

மேலும் அரக்கோணம் மற்றும் வேலூர் மெமு விரைவு ரயில் ஜூலை 11, 18, 25மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது. கோவை மற்றும் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.