
தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய உதவும் வகையில் இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பனை மரங்கள் குறித்த நெட்ட நெட்ட பனைமரமே என்ற விளக்க பட புத்தகத்தையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி விவசாயிகள் புவிசார் கணக்கெடுப்பு எண் மூலம் மண்ணின் ஆரோக்கிய நிலையை அறிய இந்த இணையதளத்தை அணுகலாம். இந்த இணையதள முகவரி http://tnagriculture.in/mannvalam என்பதாகும். இதில் விவசாயிகள் ph, கரிம கார்பன் மற்றும் சுண்ண நீர்று சார்பு போன்ற இதர சில விவரங்களையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.