தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைத் துளை விற்பனை செய்வதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் மங்களம் என்ற பெயரில் மஞ்சள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் சோப்பு என அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த பொருட்கள் அனைத்தும் குறைவான விலையில் நல்ல தரமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்கள் அனைத்தையும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் 170 டன் மஞ்சள், 36 மசாலா பொருட்கள், 161 டன் மாவு வகைகள், 132 டன் உளுத்தம் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் விற்பனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.