சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் போராட்டத்தை கைவிட போவதில்லை என்று ஆசிரியர்கள் முடிவில் உள்ளார்கள். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்திய தோல்வியடைந்ததால் ஆசிரியர்கள் போராட்டம் வேகமடுத்துள்ளது.

இந்த நிலையில்  பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனை அடுத்து எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுடைய சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.